ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
'புஷ்பா' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார் ஆக பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அவர் தற்போது தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்குப் பிறகு 'கேஜிஎப், சலார்' படங்களின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை படத்தைத் தயாரிக்க உள்ள தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார். அல்லு அர்ஜுன், பிரசாந்த் நீல் இருவரும் தற்போதுள்ள படங்களை முடித்த பிறகு இந்த 'ராவணம்' படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
ராமாயணத்தின் வில்லன் கதாபாத்திரமான ராவணன் கதையை மாற்றி 'பேன்டஸி' வகையில் இந்தப் படத்தைக் கொடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ராமாயணத்தைத் தழுவித்தான் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க 2010ல் 'ராவணன்' படம் வெளிவந்தது.
'ராவணம்' படத்தை அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.