தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
எழில் இயக்கிய 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் ரோபோ சங்கர், சூரி, ரவிமரியா கூட்டணியில் உருவான 'அன்னிக்கு காலையில 6 மணி இருக்கும். கோழி கொக்கரக்கோ'னு கூவியது என்ற காமெடி வெகுபிரபலம். படம் வெளியாகி, 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த காமெடி பேசப்படுகிறது. பலரால் சிரிக்கப்படுகிறது. அந்த காமெடியை மையமாக வைத்து பல மீம்ஸ், ட்ரோல் வந்துவிட்டன.
அந்த காமெடி குறித்து பேசியுள்ள இயக்குனர் ஆர்.கே.செல்வமணி 'பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல விவகாரங்களால் எனக்கு ஏகப்பட்ட டென்ஷன். அந்த மனநிலையில் வீட்டுக்கு போவேன். என் முகத்தை பார்த்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தள்ளிப்போய்விடுவார்கள். ஆனால், நானே, என் மனநிலையை மாற்ற இந்த காமெடியை பார்த்து ரசிப்பேன். என்னை அறியாமல் சிரித்து விடுவேன். மனம் லேசாகிவிடும். உண்மையில் ஒரு படத்தில் காமெடி எடுப்பதுதான் கஷ்டம். நான் காமெடி சீன் எடுக்கும்போது அதில் நடிப்பவர்கள் ஆளாளுக்கு சொந்த வசனங்களை அடுக்குவார்கள். அவர்களுக்குள் போட்டி வரும். எனக்கு எப்படி முடிப்பது என்று தெரியாது. எடிட்டரும் கஷ்டப்படுவார்கள். ஆகவே, மற்ற சீன்களை விட காமெடி சீன் எடுப்பதுதான் எனக்கும், மற்ற இயக்குனர்களுக்கும் கஷ்டம்'' என்றார்.