நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பான் இந்தியத் திரைப்படம் 'குபேரா'. இப்படத்தைத் தமிழ், தெலுங்கில் உருவாக்கி, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
தெலுங்கில் மட்டுமே இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. மற்ற மொழிகளில் குறிப்பாக தமிழில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா வெளியீட்டிற்குப் பின்பு அளித்த ஒரு பேட்டியில், “தமிழ் ரசிகர்களிடம் 'குபேரா' அதிக வரவேற்பைப் பெறும் என்று நான் நம்பினேன். அவர்களின் உணர்வுகளை மனதில் வைத்துக் கொண்டு படத்தில் பல அம்சங்களை நாங்கள் வடிவமைத்தோம். படத்தின் நாயகனாக தனுஷ் நடித்ததால் அவர்களிடம் அந்த உணர்வு வலுவாக இணையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த முடிவு எதிர்பாராதது,” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தனுஷின் 5வது 100 கோடிப் படமாக 'குபேரா' அமைந்தாலும், அதில் சுமார் 20 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூலித்துள்ளதாம். தெலுங்கு மாநிலங்களில் 55 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், ஹிந்தியில் 2 கோடியும், கேரளாவில் ஒரு கோடியும், வெளிநாடுகளில் 28 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், ஹிந்தி இரு மொழிகளிலும் இந்தப் படத்தை உரிய விதத்தில் கொண்டு போய் சேர்க்கவில்லை என்பது தனுஷ் ரசிகர்களின் கமெண்ட்டாக உள்ளது. தமிழில் 100 கோடி வரையிலும் வசூலித்திருக்கலாம் என்பது இங்குள்ள திரையுலகினரின் கருத்தாகவும் இருக்கிறது. தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் தெலுங்குத் திரையுலகத்தில் பிரபலமானவர்கள். அதனால், அங்கும் இந்தப் படம் நிறையவே வசூல் செய்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.