இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் விஜய், தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர் விஜய் தேவரகொன்டா என இந்த இரண்டு விஜய் நடிகர்களைப் பற்றிய எந்த செய்தி வந்தாலும் அவை வைரலாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய விஜய்க்கு, நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்து பகிர்ந்த புகைப்படம் அரசியல், சினிமா வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது தெலுங்கு நடிகர் விஜய் தெரிவித்த வாழ்த்து செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மைசா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது. அதைப் பகிர்ந்த விஜய், “இது பயங்கரமாக இருக்கப் போகிறது,” என்று வாழ்த்தியிருந்தார். அந்த வாழ்த்தைப் பகிர்ந்து ராஷ்மிகா அளித்த பதிலில், “விஜ்ஜ்ஜஜஜு…, இதன் மூலம் உங்களைப் பெருமைப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
இதன் மூலம் விஜய், ராஷ்மிகா இடையிலான காதலும், அவர் விஜய்யை, விஜ்ஜு என செல்லமாக அழைக்கிறார் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.