என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பின்னர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் நுழைந்த இவர் பிக் பாஸ் பிரபலத்திற்கு பின்னர் முருங்கைக்காய் சிப்ஸ், டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கதாநாயகனாக நடிக்க பன் பட்டர் ஜாம் என்கிற படம் தயாராகி வருகிறது. வரும் ஜூலை 17ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது..
இதை பார்த்துவிட்டு நடிகர் விஜய் ராஜூ ஜெயமோகனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் இந்த வீடியோ தன்னை சிரிக்க வைத்ததாகவும் ராஜு ஜெயமோகன் கூறியுள்ளார். இந்த தகவலை பெருமையாக பகிர்ந்து கொண்டுள்ள ராஜு ஜெயமோகன், “விஜய் போனில் அழைத்து, வேற லெவல் பா... உண்மையிலேயே தியேட்டர்ல பாக்கணும்னு தோணுது” என்று கூறினார். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். தளபதியை நான் இன்று சிரிக்க வைத்து விட்டேன். அப்படி என்றால் இந்த உலகம் எனக்குத்தான்” என்று கூறியுள்ளார்.