மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
1966ம் ஆண்டு வெளியான 'சரஸ்வதி சபதம்' படம் ஏ.பி.நாகராஜனின் வெற்றி படங்களில் ஒன்று. சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா என பலர் நடித்திருந்தார்கள். கிராமங்களில் சொல்லப்படும் நாட்டார் வழி கதைதான் இது.
கல்வி கடவுள் சரஸ்வதி, செல்வத்தின் கடவுள் லட்சுமி, வீரத்தின் கடவுள் பார்வதி மூவருக்கும் யார் பெரியவர் என்ற சண்டை வரும். இதற்காக அவர்கள் பூமியில் மனிதர்களை தேர்ந்தெடுத்து தங்கள் சக்தியை வழங்குவார்கள், எந்த மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறானோ அந்த சக்தியை கொண்ட கடவுளே பெரியவர் என்ற போட்டி நடப்பதுதான் படத்தின் கதை.
1951ம் ஆண்டு வெளிவந்த 'கலாவதி' என்ற படத்தின் கதையும் இதுதான். கல்வி கடவுளான சரஸ்வதிக்கும் செல்வத்தின் கடவுளான லட்சுமிக்கும் போட்டி வரும், பூமியில் ஒரு விவசாயியை தேர்வு செய்து லட்சுமி அவனுக்கு தங்க கட்டிகளை கொடுப்பார், சரஸ்வதி கல்வியை கொடுப்பார். இறுதியில் வெற்றி பெற்றது தங்க கட்டியாக, கல்வியா என்பதுதான் படத்தின் கதை.
எல்.எஸ்.ராமச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் டி.எஸ்.துரைராஜ், டி.ஏ.ஜெயலட்சுமி நடித்திருந்தனர். எம்.எஸ்.ஞானமணி தயாரித்திருந்தார். வின்ஸ்டர் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்தது. கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஸ்டார் ஸ்டூடியோவில் முழு படமும் தயாரானது.