ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் தக் லைப். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான படம் பெரும் தோல்வியை சந்தித்தது.
பட வெளியீட்டிற்கு முன்பாக இந்தப் படத்தை 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளோம் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள். அதற்கு இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கத்தினர் பாராட்டும் தெரிவித்தனர். பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாவது வழக்கம். ஆனால், இந்த 'தக் லைப்' படம் மீது கொண்ட அதீத நம்பிக்கையில் படக்குழுவினர் 8 வாரங்கள் என்று அறிவித்தனர்.
இப்போது அது நடக்காமல் போய்விட்டதாகத் தகவல். 4 வாரங்களுக்குள் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம் அழுத்தம் கொடுத்து வருகிறதாம். முதலில் பேசிய விலையை விட கால் பங்கு விலையைக் குறைக்கவும் செய்துள்ளார்களாம். பின்னர் ஒரு வழியாகப் பேசி ஒரு விலைக்குப் பேசி முடித்துள்ளார்கள். முன்பை விட 10 சதவீதம் மட்டுமே விலையக் குறைத்துள்ளார்களாம்.
இதனிடையே, 8 வாரங்களில் வெளியிடாமல் 4 வாரங்களில் வெளியிட்டால் அதற்காக ஒப்பந்தத்தை மீறிய வகையில் சுமார் 25 லட்சம் அபராதம் விதிக்க மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாது ஏற்பட்ட நஷ்டத்தையும் சரி செய்யக் கேட்டுள்ளார்களாம். அந்த பேச்சு வார்த்தைகளும் முடிந்த பின் ஓடிடி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அன்று பாராட்டுத் தெரிவித்து இன்று அபராதம் விதிக்க உள்ளார்கள் என்பதுதான் பாலிவுட்டிலும் பேச்சாக உள்ளதாம்.