நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் தெரியாத விஷயங்களைக் கூட தெளிவாகப் புரிய வைக்கும்படியான சில படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் சில இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல், பயன்பாடு என 'கேங்ஸ்டர்' கதைகளை உருவாக்குவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த 'விக்ரம்' படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தினால் தான் பெரும் வீரமே வருகிறது என வில்லன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார் லோகேஷ்.
போதையை எதிர்க்கும் படங்கள் எனப் பெயரளவில் சொல்லிவிட்டு, அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள், எப்படியெல்லாம் போதை ஏற்படுகிறது என காட்சிக்குக் காட்சி 'டீடெய்லிங்'குடன் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டில் மட்டுமே முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவந்த படங்களில் கூட போதைப் பொருள் பயன்படுத்தும் கதாபாத்திரங்களை வைப்பதையும் பார்க்க முடிந்தது.
இப்படியான போதைப் பொருள் பற்றிய கதைகள் கொண்ட படங்கள் கடந்த சில வருடங்களில்தான் அதிகமாக வர ஆரம்பித்தது. தமிழ் சினிமாக்களில் ஒரு காலத்தில் பீடி, சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருந்தது. அதன்பிறகு சாராயம், கள்ளு குடிப்பது போன்ற காட்சிகள் வர ஆரம்பித்தது. தற்போது அரசே நடத்தும் 'டாஸ்மாக்' காட்சிகள் இல்லாத படங்களைப் பார்க்கவே முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
அதற்கும் மேலாக அதிக விலையுள்ள போதைப் பொருள் பக்கம் இளைஞர்களை மறைமுகமாக ஆசையைத் தூண்டும் விதமாக இந்தக் காலத்தில் நிறைய படங்கள் வருகின்றன என்பது சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது. அவற்றிற்குக் கூட 'சென்சார்' விதிகளில் இன்னும் அதிகமான கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.