தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
கவர்ச்சியான உடல், குழந்தைத்தனமான முகம் என கங்கை அமரனின் 'கோழி கூவுது' படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே முன்னணி நடிகை ஆனவர் விஜி. 1966ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தனது, 17 வயதில் 'கோழி கூவுது' படத்தில் அறிமுகமானார்.
'சாட்சி, பொய்கால் குதிரை, அண்ணே அண்ணே, வெற்றி' என அடுத்தடுத்த படத்தில் நடித்தார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஹீரோயினாக 25க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக விஜயகாந்துக்கு அதிக படங்களில் ஜோடியாக நடித்தார்.
விஜய் நடித்த 'பூவே உனக்காக' படத்தில் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது, ஏற்பட்ட சிறு விபத்தால் அவரது முதுகுதண்டு பாதிக்கப்பட்டது. முன்னணி தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது, அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட காயத்தில் கடுமையான தொற்று இருந்ததால் அவரது கால்கள் செயல் இழந்தது. இதற்காக மருத்துவமனை அவருக்கு நஷ்டஈடு கொடுத்தது.
பின்னர் ஒரு வழியாக குணமடைந்தார். அதன் பிறகு சினிமா வாய்ப்பில்லாமல் இருந்த அவருக்கு விஜயகாந்த் 'சிம்மாசனம்' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். நடிகர் சங்கம் மூலம் உதவிகள் செய்து வந்தார்.
நோயுற்ற காலத்தில் தனக்கு உதவியாக இருந்த ஏ.ஆர்.ரமேஷ் என்ற இயக்குனரை காதலித்தார். ஆனால் அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை அறிந்த விஜி மனம் உடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான ஏ.ஆர்.ரமேஷ் மற்றம் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சினிமாவையும், நோயையும் ஜெயித்த விஜி, காதலில் தோற்றுப்போனார். 'விஜி' என்பதன் பொருள் 'வெற்றி பெறுபவள்' என்பதாகும்.