ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்பாளர் விஜய் தயாரித்து, நடிக்கும் படம் பிக்பாக்ட். நாயகியாக யோகலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரேம் ஒளிப்பதிவு செய்கிறார், ஷாஜஹான் இசை அமைக்கிறார். ஜே.எஸ்.ஜூபர் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது. இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை. பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிக்பாக்கெட் பற்றி சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் சொல்லவில்லை. இந்த படம் அதுபற்றி விரிவாக பேசுகிறது. பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாபியா கும்பல் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம்" என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது. புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி படப்பிடிப்பினை துவங்கி வைத்தார்.