டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

தெலுங்கு திரை உலகில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் முதல்முறையாக தனது தயாரிப்பில் தி இந்தியா ஹவுஸ் என்கிற படத்தை தயாரித்து வருகிறார். கார்த்திகேயா 2 புகழ் நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் வம்சி கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி வரலாற்று படமாக உருவாகி வருகிறது.
இதற்காக சம்சாபாத் அருகில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது அங்கே மிகப்பெரிய வாட்டர் டேங்க் ஒன்றும் நிறுவப்பட்டிருந்தது. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென வாட்டர் டேங்க் உடைந்து மிகப்பெரிய அளவில் தண்ணீர் வெள்ளம் போல படப்பிடிப்பு அரங்கை சூழ்ந்தது. இதனால் உதவி ஒளிப்பதிவாளர்கள் சிலர் பெரிய அளவில் காயமடைந்தனர். மேலும் படக்குழுவினர் பலருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு உபகரணங்கள் சிலவும் சேதம் அடைந்துள்ளன. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.