என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தெலுங்குத் திரையுலகின் மற்றுமொரு பான் இந்தியா ஸ்டார் ஆக இருப்பவர் அல்லு அர்ஜுன். அவரும் பிரபல இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் இருவரும் புதிய படம் ஒன்றில் இணைவதாக இருந்தது. 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு இந்தப் படம்தான் ஆரம்பமாகும் என்றார்கள்.
ஆனால், அல்லு அர்ஜுன் திடீரென அட்லி இயக்கத்தில் நடிக்க சம்மதித்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகும் நிலை வரை வந்துவிட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக திரிவிக்ரம், அல்லு ஆர்ஜுன் இணையவிருந்த படம் 'டிராப்' ஆகிவிட்டது, அல்லு அர்ஜுன் மீது திரிவிக்ரம் கோபத்தில் உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
தன் படத்தில் நடிக்க சம்மதித்து, திடீரென அட்லி பக்கம் அவர் போய்விட்டதே திரிவிக்ரமின் கோபத்திற்குக் காரணம் என்கிறார்கள். இருவரும் இணைந்து 'ஜுலாயி, சன் ஆப் சத்தியமூர்த்தி, அலா வைகுந்தபுரம்லோ' ஆகிய படங்களைக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி சற்று முன்னர் எக்ஸ் தளத்தில், “திரிவிக்ரம் காருவின் அடுத்த படங்கள், 'வெங்கடேஷ் மற்றும் ஜுனியர் என்டிஆர் ஆகியோருடன் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மற்றவை அனைத்தும் வெறும் யூகம்தான். திரிவிக்ரம் காருவின் உறுதிப்படுத்தப்பட்ட படங்கள் எவை என்பதை இந்தப் பகுதியில் நான் அறிவிப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் திரிவிக்ரம், அல்லு அர்ஜுன் இணைய உள்ளதாக பேசப்பட்ட படம் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.