'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் ஆரம்பமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், அட்லியின் 6வது படமாகவும் தயாராகி வரும் இப்படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாகக் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
படத்தில் மற்ற கதாநாயகிகளாக மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோரும் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உண்டு. இன்று முதல் அல்லு அர்ஜுன், மிருணாள் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். தீபிகா படுகோனே ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.
சரித்திர காலம் மற்றும் இந்தக் காலம் கலந்து உருவாக்கப்பட்டுள்ள பேன்டஸி டைப் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா 2' படத்தின் மூலம் அல்லு அர்ஜுனும், 'ஜவான்' படத்தின் மூலம் அட்லியும் 1000 கோடி கிளப்பில் உள்ளனர். இருவரும் இணையும் இந்தப் படம் எத்தனை கோடி கிளப்பில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.