விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
பழம்பெரும் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசைத் துறையில் சாதித்தாலும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. பாடகராகவே சில மலையாள படங்களில் தோன்றிய அவர் 'அவன்' என்ற மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வரவேற்பை பெறவில்லை, பிறகு தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்ததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு 'படை வீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படமும் பெரிதாக அவருக்கு உதவவில்லை. அதன் பிறகு 'சாலமன்' என்ற 3டி படத்தில் நடித்தார், பான் இந்தியா படமாக வெளியான இதுவும் சரியாக போகவில்லை.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில் அவர் நாயகன் மிர்ச்சி சிவாவின் நண்பராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமாவது விஜய் யேசுதாசுக்கு நல்லதொரு இடத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.