பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? |
இசையமைப்பாளர் இளையராஜா தனது 83வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சென்னை, தி.நகரில் உள்ள ஸ்டூடியோவிலும், வீட்டிலும் திரளான ரசிகர்கள், சினிமாகாரர்கள், விஐபிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அவருக்கு நேற்று 83வது பிறந்தநாள் என்பதால் பலர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ஸ்டூடியோ வாசலில் நின்று அவர் பாடல்களை பாடினர். இன்றைக்கு முன்னணி நடிகர்கள் தொடங்கி சின்ன நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமாகாரர்கள் என அனைவரிடமும் சோஷியல் மீடியா கணக்கு உள்ளது. ஆனால், நேற்றைக்கு பல முன்னணி நடிகர்கள், இளையராஜாவுடன் பணியாற்றவர்கள் , அவர் இசையில் பாடியவர்கள், அவரால் உயர்ந்தவர்கள், பணம் சம்பாதித்தவர்கள் என ஒரு தரப்பினர் அவருக்கு தங்கள் சோஷியல் மீடியாவில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமாக்களில் சீனியர்களை கொண்டாடுகிறார்கள். தமிழில் 80 வயதை தொட்ட ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். ஆனால், அவர் பிறந்தநாளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாவில் கூட பலர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது இளையராஜாவுக்கு நெருக்கமானர்களின் ஆதங்கமாக இருக்கிறது.