தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தமிழ் சினிமா உலகில் தனித்த பாதையை உருவாக்கியவர்களில் இயக்குனர் மணிரத்னம் முக்கியமானவர். இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பிறந்தநாள் வாழ்த்துகள், மணிரத்னம். 'நாயகன்' முதல் 'தக் லைப்' வரை சக கலைஞராக, குடும்பமாக, சக கனவு காண்பவராக மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சினிமாவின் வாழ்நாள் மாணவர்களாக, நாம் ஒன்றாகக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம். ஒவ்வொரு அத்தியாத்திலும் உங்கள் இருப்பு பலத்தின் ஆதராரமாக இருந்து வருகிறது. சந்தேகம் ஏற்படும் தருணங்களில், எனது மனம் திரும்பும், மற்றவர்களைப் போல சினிமாவின் மொழியுடன் ஆழமாகப் பழகிய ஆன்மா.
உங்கள் கதைகள் தொடர்ந்து வெளிவரட்டும். ஏனென்றால் ஒவ்வொரு பிரேமிலும், உங்கள் பார்வை சினிமாவிற்கு ஆழம், அழகு மற்றும் அர்த்தத்தைக் கொண்டு வருகிறது. என்றென்றும் உங்கள் நண்பன், கமல்ஹாசன்,” என வாழ்த்தியுள்ளார்.
'நாயகன்' படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள 'தக் லைப்' படம் இந்த வாரம் ஜுன் 5ம் தேதி வெளியாகிறது.