பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
மதயானை கூட்டம், ராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை கூறிவிட்டு சென்னை திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சென்னை வந்தார். மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். பாலுமகேந்திராவுக்குப் பின் வெற்றிமாறனுடம் இணைந்து பணியாற்றி வந்த இவர், பொல்லாதவன், கிடாரி போன்ற படங்களில் நடித்தார். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுத உதவினார்.
நீண்ட போராட்டத்திற்கு பின் கதிர், ஓவியா நடித்த மதயானை கூட்டம் படத்தை இயக்கினார். தென் தமிழகத்தில் இந்தப் படம் ஓரளவுக்கு பேசப்பட்டது. தொடர்ந்து சாந்தனு பாக்யராஜின் இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அடுத்து பேரும் போரும் என்ற படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூறிவிட்டு திரும்பும் போது மாரடைப்பால் மரணம் ஏற்பட்டது. இவரின் திடீர் மரணம் திரையுலகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ளனர். அவரது உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.
மே 29ம் தேதி தான் நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் திடீரென காலமானார். இந்த சோகம் மறையும் முன்பே விக்ரம் சுகுமாரனின் மறைவு திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.