100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை படங்களைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை, தலைவன் தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார் நித்யா மேனன். இவர் அளித்த ஒரு பேட்டியில், ரசிகர்களின் செயல்பாடு குறித்து தனது அதிருப்தி மனநிலையை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அங்கு எங்களை பார்க்க கூடும் ரசிகர்கள் கை கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒட்டி உரசியபடி நின்று செல்பி எடுக்கிறார்கள். விலகி நின்றாலும் கூட அவர்கள் நெருங்கியே வருகிறார்கள். நடிகைகள் என்றால் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இவர்கள் எளிதாக எங்களை தொடுவதற்கு நாங்கள் என்ன பொம்மைகளா? என்று கேள்வி எழுப்பி தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் நித்யா மேனன்.