இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
பாலிவுட்டில் கடந்த 2000ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‛ஹேரா பெரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 2006ல் இரண்டாம் பாகமாக உருவாகி வெளியானது. அதன் பிறகு தற்போது இதன் மூன்றாம் பாகம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் குணசித்திர நடிகர் பரேஷ் ராவல் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. முந்தைய இரண்டு பாகங்களிலும் இவர்கள்தான் நடித்திருந்தனர். இந்த நிலையில் படக்குழுவினர் யாரிடமும் எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் இந்த படத்தில் இருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார் பரேஷ் ராவல். இது படக்குழுவினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான அக்ஷய் குமார், நடிகர் பரேஷ் ராவலிடம் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பரேஷ் ராவல், என்னுடைய வழக்கறிஞர் என்னுடைய விலகல் மற்றும் வெளியேற்றம் குறித்து மிகச்சரியான ஒரு விளக்க நோட்டீசை அனுப்பியுள்ளார். அதில் என்னுடைய தரப்பு பதிலை அவர்கள் படித்தார்கள் என்றால் அனைத்து பிரச்சினைகளும் அப்போதே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் இருந்து பரேஷ் ராவல் விலகியதற்கு சம்பளப் பிரச்சனையும் காரணம் இல்லை, கதை குறித்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், அதை நேரடியாக சொல்லாமல் இப்படி திடீரென விலகி அதற்காக ஒரு விளக்க கடிதம் எழுதி வக்கீல் நோட்டீஸாக அனுப்பியிருப்பது பாலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.