இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‛இருவர்' என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‛ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன்' என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், சமீபகாலமாக ஓரளவு வெயிட் போட்டு காணப்படுவதால் சோசியல் மீடியாவில் அவரை பலரும் உருவ கேலி செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அதற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛கடந்த 2011ம் ஆண்டு எனது மகள் பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது. ஆனால் இதை வைத்து பலரும் பலதரப்பட்ட கேள்வி எழுப்புகிறார்கள். உடல் எடை கூடியதற்கு என்ன காரணம்? ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். என் மீது இவர்களுக்கு ஏன்தான் இத்தனை அக்கறையோ தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் யாருக்கும் எந்த பதிலும் கொடுக்க நான் விரும்பவில்லை. என்னுடைய எடையை நினைத்து நான் ஒருபோதும் பீல் பண்ணியதில்லை. அதேபோல் என் உடல் எடையை வைத்து யார் என்னை எப்படி விமர்சித்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதுமில்லை'' என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.