லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகர் ஆனார். இந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் நேரடி ஹிந்திப் 'படம் வார் 2'. இதில் அவர் ஹிருத்திக் ரோஷனுக்கு இணையான கேரக்டரில் நடித்துள்ளார். இந்திய நாட்டின் ஸ்பையாக இருந்து தடம் மாறியவராக நடிக்கிறார். அவருக்கும், ஹிருத்திக் ரோஷனுக்கும் இடையிலான மோதல்தான் கதை.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் இரண்டு ஹீரோக்களுக்குமான சமநிலை வெளிப்படுத்தப்பட்டது. இந்த படத்தின் வெற்றியில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் தடம் பாதிப்பாரா? இல்லையா என்பது தெரிய வரும்.
இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் கூறியிருப்பதாவது: நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்து போயுள்ளேன். ஒரு நடிகராக இருப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம். வார்-2. ஒய்.ஆர்.எப் ஸ்பை யுனிவர்ஸின் இந்த படம் எனக்கு முற்றிலும் புதிய அவதாரத்தை அளித்துள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி வரை திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் வெளியீட்டினை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை. என்றார்.