மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
அர்ஜுன் ரெட்டி படத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் அதன் ரீமேக்கான கபீர் சிங் மற்றும் அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கி டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் வலுவான இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அடுத்ததாக இவர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து தீபிகா படுகோனே வெளியேறிவிட்டார் என்றும் இயக்குனருடன் கருத்தியலாக ஒத்து வராததால் இந்த படத்தில் இருந்து அவர் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் தீபிகா படுகோனே ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்ததால்தான் இயக்குனராகவே அவரை இந்த படத்தில் இருந்து கழட்டி விட்டார் என்று புதிய தகவல் ஒன்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து தற்போது வெளியாகி உள்ளது.. கடந்த வருடமே இந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில் கால்ஷீட் ஒத்து வராததால் இதில் நடிக்கவில்லை என்று தீபிகா படுகோனே கூறியிருந்தார். ஆனாலும் அவருக்காக தேதிகள் மாற்றப்பட்டு படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இடையில் கர்ப்பமாக இருந்த அவர் தற்போது குழந்தை பெற்றுக்கொண்டு சில மாதங்களே ஆன நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வது குறித்து சில நிபந்தனைகளை விதித்தாராம்.
அதாவது தினசரி படப்பிடிப்பில் மொத்தமே எட்டு மணி நேரம் தான் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார் தீபிகா. அது மட்டுமல்ல, அவருக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 20 கோடி வரை தருவதாக சொல்லப்பட்ட நிலையில் கூட படத்தின் லாபத்திலும் பங்கு கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் தெலுங்கு பேசி நடிக்க மாட்டேன் என கூறியதாகவும்... இப்படி பல நிபந்தனைகளை அவர் விதித்ததால் தான் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தானாகவே தீபிகா படுகோனேவை விலக்கி விட்டார் என்றும் வேறு கதாநாயகி தேடும் பணிகள் துவங்கியுள்ளது என்றும் தற்போது கூறப்படுகிறது.