லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நயன்தாரா நடித்த 'அறம், ஐரா', சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ, டாக்டர், அயலான்' போன்ற படங்களை தயாரித்தவர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ். இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தயாரிப்பாளர் ராஜேஷ் விளையாட்டு வீரராக நடிப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இப்படத்தில் ஆதிரன் என்ற வேடத்தில் நடிக்கும் ராஜேஷ், நீதிமன்ற வளாகத்தை நோக்கி செல்வதும், அங்கு வழக்கறிஞர்கள் கூட்டமாக வந்து கொண்டிருக்க, இவர் அவர்களை கடந்து நீதிமன்றத்தை நோக்கி செல்வது போன்ற காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஸ்வஸ்திக் விஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை காலை 11:03 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.