அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து, 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லி. அதன்பிறகு விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். பின்பு பாலிவுட்டுக்கு சென்ற அவர் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்து அல்லு அர்ஜூனின் 22வது படத்தை இயக்க இருக்கிறார்.
இது தவிர 'சங்கிலி புங்கிலி கதவ திற, அந்தகாரம்' என்ற தமிழ் படங்களையும், 'பேபி ஜான்' என்ற இந்திப் படத்தையும் தயாரித்தார். இந்த நிலையில் அட்லியின் கலைச் சேவையை பாராட்டி சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. அந்த விழாவில் அட்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.