ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‛தக் லைப்' படம் ஜுன் 5ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பாக படத்தில் நடித்த கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். கமல் பேசுகையில், ‛‛தக் லைப் படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். மணிரத்னம் எடுக்க நினைத்த சினிமாவை இப்போது தான் இயக்குகிறார். அவர் அவரது ஸ்டைலில் இயக்கி உள்ளார். நான் என் ஸ்டைலில் நடித்துள்ளேன். நாயகன் படத்தின் சாயலே தெரியாத அளவுக்கு இந்த படத்தை எடுத்துள்ளோம். இது நாயகன் படத்தின் தொடர்ச்சி அல்ல என்பதை பல இடங்களில் கூறியுள்ளோம்.
அடுத்த தலைமுறை நடிகர்கள் என்னை பற்றி பேசுகிறார்கள். அதுவே எனக்கு கிடைத்த பெருமை. அவர்கள் இன்னும் மேலே உயரணும் என்பது தான் என் ஆசை. என்னை பார்த்து அவர்கள் கற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து நிறைய விஷயம் கற்கிறேன். ஏஐ கற்க தான் போனேன். ஆனால் அது நம்மள விட பெருசு. அதை முழுமையாக தெரியாமல் நான் பயன்படுத்த மாட்டேன். வாழ்வில் மரணத்தை தவிர்க்க முடியாது. இருப்பதற்குள் நாம் என்ன பண்ண முடியுமோ அதை செய்து விடணும்'' என்றார்
சிம்பு பேசுகையில், ‛‛பொதுவாக நாம் நம்முடைய காட்சி பற்றி தான் கவனம் செலுத்துவோம். ஆனால் கமல் அவருடையது மட்டுமின்றி எல்லோருடைய காட்சி, வசனங்களையும் உற்று கவனிப்பார். இதுமாதிரி அவரிடம் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன். இப்போது என்னை பார்ப்பவர்கள் முன்பை விட அமைதியான ஆளாக இருப்பதாக சொல்கிறார்கள். ஏன் என தெரியவில்லை. அந்த வயதில் அப்படி இருந்தேன். இந்த வயதில் இப்படி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கமல் அவராக இருந்தார். நான் நானாக இருந்தேன். என் திருமணம் நேரம் வரும்போது கண்டிப்பாக நடக்கும்'' என்றார்.