கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‛மாமன்'. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். நேற்று முன்தினம் (மே 16) ரிலீசானது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார். அவருடன் அங்கு இருந்த ரசிகர்கள், பெண்கள் புகைப்படங்களை எடுத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறும்போது, ‛‛ என்னுடைய இரண்டாவது திரைப்படம் ‛மாயாநதி' படத்தில் நடிக்கும் போது இருந்து மதுரை வருகிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் துவங்கியது. என் அனைத்து படங்களின் படப்பிடிப்பும் துவங்குவதற்கு முன்பாக மீனாட்சி அம்மன் கோவில் வந்து தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
21ம் தேதி முதல் என் புதிய படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அதற்காக தான் தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட வந்திருக்கிறேன். எனக்கு மீனாட்சி அம்மா மிகவும் பிடிக்கும்.
மாமன் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது ஒரு குடும்ப படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றாக ஓடும் என நம்புகிறேன். தமிழ் திரையுலகில் தான் எனக்கு அதிகமான வாய்ப்புகள் வருகிறது. தமிழில் தான் நிறைய படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தக் லைப் டிரைலர் நேற்று வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது; ஹாலிவுட் திரைப்பட போல உள்ளது.
மதுரை மற்றும் மீனாட்சி அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். மதுரைக்கு வந்து திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும். மதுரைக்கு எப்போது வந்தாலும் கோவிலுக்கு தான் அதிகமாக செல்ல முடியும். நான் வெஜிடேரியன் அதனால், மதுரை அசைவ உணவுகளை நான் இன்னும் சாப்பிட்டது கிடையாது; சைவ உணவு தான் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை'' எனக் கூறினார்.