ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் இங்கு தயாரிப்பில் இறங்கியது தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்தப் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் லாபத்தைக் கொடுத்த படம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லவ் டுடே, டிராகன்' நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க 'டூட்' படத்தை அடுத்து தயாரித்து வருகிறது. தொடர்ந்து தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் அந்நிறுவனம் புதிய படங்களைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்துடனும் பேசி வருவதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 'மென்டல் மதிலோ, அன்டே சுந்தரநிகி, சரிபொத சனிவாரம்' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனரான விவேக் ஆத்ரேயா அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல்.
ரஜினிகாந்த் தற்போது 'கூலி' படத்தில் நடித்து முடித்துவிட்டு, 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் பேசி வருவதாகவும், கார்த்திக் சுப்பராஜ் அதை இயக்கலாம் என்றும் தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. தற்போது தெலுங்கு நிறுவனம், இயக்குனர் பெயரும் அடிபடுகிறது. யாருக்கு முன்னுரிமை என்பது விரைவில் தெரிய வரும்.