ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

நடிகர் ரவி மோகன்(ஜெயம் ரவி) தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்து, பாடகி கெனிஷா உடன் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் இருவரும் ஐசரி இல்ல திருமண விழாவில் பங்கேற்றபோது அதை விமர்சித்தார் ஆர்த்தி. இதையடுத்து மனைவி உடனான பிரிவு, கெனிஷா பற்றி ரவி வெளியிட்ட அறிக்கையில் ‛‛நான் என் மனைவியை மட்டுமே பிரிந்தேன், மகன்களை அல்ல. என் வாழ்வு எனது மகன்களுக்காகவே. என்னை கணவராக பார்க்கவில்லை, தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார். கெனிஷா என் நண்பராக இருந்தவர். தற்போது ஒரு அழகான துணையாகி உள்ளார் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை : 25 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். பட வெளியீடு தவிர்த்து எதற்காகவும் நான் மீடியா முன் வந்தது இல்லை. ஆனால் இப்போது என்னை பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.
பொய்யான குற்றச்சாட்டு
கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மவுனமாய் இருந்தேன். என் மாப்பிள்ளை(ஜெயம் ரவி) என்னிடம் நீங்கள் படமும் தயாரிக்க வேண்டும் என்றார். அவரை வைத்து அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று படங்களை தயாரித்தேன். இதற்காக ரூ.100 கோடி கடன் பெற்றேன். அந்த பணத்தில் 25 சதவீதம் அவருக்கு சம்பளமாக வழங்கினேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
ஆனால் நான் வாங்கிய கடனுக்கு அவரை பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை என் மீது வைத்துள்ளார். இதில் உண்மை இல்லை. அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி சொந்த மகனாகவே கருதினேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது என்பதற்காக பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். கோடிக்கணக்கான ரூபாய்க்கு அவரை பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்.
பொய் உங்களை தரம் தாழ்த்துகிறது
இன்றும் என் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவிக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் சொல்கின்ற பொய்கள், உங்களை ஹீரோ பிம்பத்திலிருந்து தரம் தாழ்த்தி விடுகிறது. நீங்கள் என்றும் ஹீரோவாகவே இருக்க வேண்டும். இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை. என் பேர குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது.
ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.