பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் | தேசிங்குராஜா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்கிறார். சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதே தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2, பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே., ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இதனால் ஒரே நாளில் சூர்யா, கார்த்தி படங்கள் நேரடியாக மோதுவது போன்ற சூழல் உருவானது. இந்நிலையில் திடீரென சர்தார் 2 படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்கி உள்ளது. படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அண்ணன் சூர்யாவிற்கு வழிவிட்டுள்ளார் தம்பி கார்த்தி.