'குபேரா' முதல் நாள் வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பிளாஷ்பேக்: நிரந்தரத் திரைக்கலைஞர்களைத் தந்த “நிழல்கள்” | சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தை 23 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்! | கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்த ரவி மோகன் - பாடகி கெனிஷா! | கந்தன் கருணை, ஷாஜகான், வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள் | 'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் மே 1ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. இப்படத்திற்கான விமர்சனம் பெரும்பாலும் நெகட்டிவ் ஆகத்தான் வெளிவந்தது. முதல் ஓரிரு நாட்கள் படத்தின் வசூல் நன்றாக இருந்ததாகவே தகவல் வெளியாகின.
46 கோடி வசூல் என படம் வெளியான மறுநாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதற்கடுத்து நான்கு நாட்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே, சற்று முன் இப்படம் 104 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
படம் லாபமா, நஷ்டமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். இருந்தாலும் நாளை சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இப்படத்திற்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள். படம் வெளியான பின்பு சென்னையில் கூட இல்லாமல் மும்பை சென்றுவிட்டார் சூர்யா. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மட்டும் ஓரிரு தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.