சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் | இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ராம்சரணுக்கு செல்லப்பிராணியால் கிடைத்த பெருமை | பத்மபூஷன் விருது : குடும்பத்துடன் டில்லியில் அஜித் | 'தொடரும்' பட போஸ்டர் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; போலீஸுக்கே பூமராங் ஆக திரும்பிய கருத்துக்கள் | நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டம் பாய்ந்தது ; ஒரு வருடத்திற்கு ஜாமின் கிடையாது | தொடரும் கதை என்னுடையது ; உதவி இயக்குனர் போலீஸில் புகார் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தனது 29வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடிப்பவர் மகேஷ்பாபு.
ரியல் எஸ்டேட் விளம்பரப் படம் ஒன்றில் நடித்த மகேஷ்பாபு அதற்காக பெற்ற சம்பளம் குறித்த விசாரணை தற்போது அமலாக்கத்துறையில் நடந்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மக்களை ஏமாற்றியதாக, அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்தற்காக பெற்ற சம்பளமும் விசாரணை வளையத்தில் சிக்கியது. அந்த நிறுவனத்திடமிருந்து அவர் எந்த விதத்தில் சம்பளம் பெற்றார் என்பதைத் தெரிவிக்க, அவருக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர் இன்று ஆஜராக வேண்டும்.
ஆனால், தனக்கு கூடுதல் அவகாசம் தரும்படி மகேஷ்பாபு பதில் கடிதம் எழுதியுள்ளாராம். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.