'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' |
நடிகர் நானி நடிப்பில் வருகின்ற மே 1ம் தேதி அன்று தெலுங்கில் 'ஹிட் 3' படம் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, தமிழ் சினிமா குறித்து பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார். அந்தவகையில் நேர்காணல் ஒன்றில் கார்த்தியின் ‛மெய்யழகன்' படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் நானி.
அவர் கூறியதாவது: "தமிழ் சினிமாவில் மட்டுமில்லை. கடந்த பத்தாண்டுகளில் நான் பார்த்த சிறந்த படம் என்றால் அது மெய்யழகன் தான். அது ஒரு மேஜிக்கல் சினிமா. நீங்கள் செட் அமைத்து ஆயிரம் கோடி செலவிடலாம். ஆனால் இந்த படம் ஒரு தனி மேஜிக். இவ்வளவு பர்சனலான ஒரு படத்தை எடுப்பது என்பது சாத்தியமில்லாதது. படம் பார்த்த பிறகு கார்த்தியிடம் படம் எனக்கு எவ்வளவு பிடித்திருந்தது என்று சொன்னேன். அந்த படத்தைப் பற்றி நினைத்தாலே நான் சந்தோஷமாகி விடுவேன்". இவ்வாறு நானி தெரிவித்துள்ளார்.