மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
நடிகர் சந்தானம் நடித்து வருகின்ற மே 16ம் தேதி அன்று வெளியாகவுள்ள படம் 'டிடி ரிட்டர்ன்ஸ் : நெக்ஸ்ட் லெவல்'. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் சந்தானம் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது சந்தானமிடம் 12 வருடங்கள் கழித்து திரைக்கு வந்த மதகஜராஜா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "மதகஜராஜா வெளியாகிறது என கேள்விப்பட்டதும் சின்னதா ஒரு பயம் இருந்தது. 12 வருஷத்துக்கு முன்பு பண்ணின காமெடி இப்போது ஒர்க் அவுட் ஆகுமான்னு நினைச்சேன். ஆனால், ஒர்க் அவுட் ஆயிடுச்சு. அப்போது சுந்தர்.சி என்னிடம் சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கு. 'சந்தானம், உங்க நேரம் ரொம்ப உச்சத்துல இருக்குது. நீங்க தொட்டது எல்லாம் துலங்குது. அதனால் 'மதகஜராஜா'விலும் உங்க போர்ஷன் பெரிய ஹிட் ஆகும்னு நினைக்கிறேன் என்றார். அந்த வார்த்தை பலித்துவிட்டது" என தெரிவித்தார்.