மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இப்போதெல்லாம் நாலு படத்தில் ஒரு படம் திகில் படமாகத்தான் வெளியாகிறது. படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுத்து விடலாம். மினிமம் கியாரண்டியும் இருக்கும். ஆனால் காதல் கதைகளும், ஆக்ஷன் கதைகளும் வந்து கொண்டிருந்த 80களில் வெளிவந்து அதிர வைத்த திகில் படம் 'நாளை உனது நாள்'.
ஏ.ஜெகன்னாதன் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த், நளினி, சத்யராஜ், செந்தாமரை, சிவச்சந்திரன், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், கணேச பாண்டியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஒரு வணிக நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் 7 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களை விமானத்தில் சுற்றுலா அனுப்பி வைக்கிறது. வானத்தில் பறக்கும்போது அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் இறங்குகிறது. அங்கு ஒரு பெரிய மாளிகை இருக்கிறது. அதில் அனைவரும் தஞ்சமடைகிறார்கள். அங்கு அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒருவர் வீதம் கொல்லப்படுகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதுதான் கதை. இது எல்லாமே அந்த நிறுவனத்தின் ஏற்பாடுதான். அவர்கள் ஏன் அந்த ஏழுபேரை தேர்வு செய்தார்கள். ஏன் கொல்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை.
ஆஹா அந்த காலத்திலேயே இப்படி யோசித்திருக்கிறார்களே என்று அவசரப்பட வேண்டாம். இது பிரபல ஆங்கில எழுத்தாளர் அகதா கிறிஸ்டியன் எழுதிய 'அன்டு தன் தேர் வேர் நன்' என்ற நாவலின் கதை. இந்த கதை இந்தியில் 'கும்னாம்' என்ற பெயரில் திரைப்படமானது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்தான் 'நாளை உனது நாள்'.