கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் |

தமிழ்ப் புத்தாண்டு முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. அதற்கு சில நாட்கள் முன்பு வெளியான 'குட் பேட் அக்லி' வசூல் ரீதியாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. 200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது.
கடந்த வாரம் வெளியானவற்றில் முக்கியமான படம் என்றால் சிபிராஜ் நடித்து வந்த 'டென் ஹவர்ஸ்'. ஓரளவு சுமாரான விமர்சனங்கள் வந்தாலும், வசூலும் சுமார் தான். அப்படத்தை விடவும் விஜய் நடித்து ரீரிலீசான 'சச்சின்' குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது என்கிறார்கள்.
இந்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி சுந்தர் சி, வடிவேலு கூட்டணியின் 'கேங்கர்ஸ்', அதற்கடுத்த நாள் எப்ரல் 25ம் தேதி சிவா, பிரியா ஆனந்த் நடித்துள்ள 'சுமோ' படமும் வெளியாக உள்ளது. இரண்டுமே நகைச்சுவைப் படங்கள்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி, வடிவேலு மீண்டும் இணைந்துள்ளார்கள். அதனால், எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களின் டிரேட் மார்க் காமெடி பார்முலாவை வைத்திருந்தால் வெற்றி நிச்சயம்.
சிவா நாயகனாக நடித்து வந்த பல படங்களில் 'தமிழ்ப்படம்' மட்டுமே பெரிய வரவேற்பைப் பெற்றது. கடந்த வருடம் வெளிவந்த 'சூது கவ்வும் 2' படம் முதல் பாகத்தின் பெயரைக் கெடுத்ததுதான் மிச்சம்.
இந்த வாரம் அவர் நடித்து வெளியாக உள்ள 'சுமோ' படம் 2021லேயே வெளியாகியிருக்க வேண்டும். இத்தனை வருட தாமதத்திற்குப் பிறகு வெளிவருகிறது. 'பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு' ஆகிய படங்களை இயக்கிய எஸ்பி ஹோசிமின் இயக்கியிருக்கிறார். 14 வருட இடைவெளிக்குப் பிறகு அவருடைய படம் ஒன்று வெளியாகிறது. இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவியாளர் இவர்.
நகைச்சுவைப் படங்களுக்குள் மோதல், ரசிகர்கள் யாருடைய நகைச்சுவைக்கு ஆதரவு தரப் போகிறார்களோ?