ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி | 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன் | அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் | என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் |

கன்னடத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படம் அடுத்த ஆண்டு 2026 பொங்கலுக்குத்தான் வெளியாக உள்ளது.
ஆனால், கடந்த சில வாரங்களாகவே இப்படத்தின் வியாபாரம் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை இதுவரை இல்லாத அளவிற்கு விற்கப்பட்டதாகச் சொன்னார்கள்.
தமிழக வினியோக உரிமையை வாங்கவும் கடும் போட்டி நிலவி இருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலையை வாங்கப் பலர் தயாராக இல்லை. இதனிடையே, 'குட் பேட் அக்லி' படத்தைத் தமிழகத்தில் வெளியிட்ட வினியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்து வெளிவந்த படங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படத்திற்கான உரிமை 100 கோடி வரை பேசப்பட்டு, 90 கோடி அளவில் முடிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல். அவ்வளவு தொகையை லாபத்துடன் வசூல் செய்ய 200 கோடி வசூலைத் தாண்ட வேண்டும். விஜய் நடித்து இதற்கு முன்பு வெளியான 'தி கோட்' படத்தின் தமிழக உரிமையையும் ராகுல்தான் பெற்றிருந்தார். அதன் விலை 50 டூ 60 கோடி மட்டுமே என்பது தகவல்.