அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஓடிடி தளங்களை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை படம் வெளியாகும் முன்பே பெரும் விலைக்கு வாங்குவது சென்ற வருடம் வரை வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாய் மாறியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் நம் அனைவரும் வீட்டில் இருந்ததால் ஓடிடி தளங்களை பார்க்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் ஓடிடி தளங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாகி கொண்டே இருந்தது.
இந்த காரணத்தால் தமிழ் படங்களை அதிக விலைக்கும் அதுபோல் லாபம் தரும் படமாகவும் ஓடிடி தளங்களில் அமைந்தது. ஆனால் தற்போது பல ஓடிடி நிறுவனங்கள் இருந்தாலும் மக்கள் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் சேர்வதும் மற்றும் பல இணைய நெட்ஒர்க்கில் ஓடிடி தளங்கள் வருவதாலும் ஓடிடி தளங்களின் தாக்கம் குறைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஓடிடி தளங்களில் படங்களின் உரிமை தொகையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் சமீபத்தில் அதிக விலைகொடுத்து ஓடிடி வாங்கிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
குட் பேட் அக்லி
அஜித்குமார் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித், திரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வரியுடன் சேர்த்து சுமார் 85 கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடித்து நெல்சன் அவர்கள் இயக்கியிருந்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் இமாலய வெற்றி பெற்றது. படத்தின் மாபெரும் வெற்றியால் ஓடிடி தளங்கள் இடையே கடும் போட்டி நடந்தது. அந்த போட்டியில் அமேசான் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தை சுமார் 90 கோடிக்கு வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. தற்போது வரை நல்ல பார்வையாளர்கள் இந்த படத்துக்கு வந்த வண்ணமே உள்ளது.
ஜனநாயகன்
விஜய் நடித்து வினோத் இயக்கிவரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பெறவும் பல நிறுவனங்கள் போட்டி போட்டது. அதில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து சுமார் 105 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
கோட்
விஜய் நடித்து கடந்த வருடம் திரையரங்கில் வெளியாகிய படம் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகும் ஒரு மாதம் முன்புதான் ஓடிடி உரிமையை பெற்றது. அந்த வகையில் இந்த கோட் திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் 108 கோடிக்கு வாங்கியது.
கூலி
ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை சமீபத்தில் அமேசான் நிறுவனம் சுமார் 110 கோடிக்கு வாங்கியுள்ளது.
தக்லைப்
மாபெரும் பொருட்செலவில் மணிரத்னம் இயக்கி வரும் படம் தக்லைப். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் இயக்கிவரும் படம் என்பதால் இந்த படத்துக்கு ஓடிடி தளங்களில் ஏகப்பட்ட போட்டா போட்டிகள். இந்த கடும் போட்டியில் நெட்ப்ளிட்ஸ் நிறுவனம் இந்த படத்தை சுமார் 145 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 05 அன்று திரைக்கு வருகிறது.
பொன்னியின் செல்வன் 1
என்னதான் முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் பெரும் விலைக்கு வாங்கியுள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டாலும் உண்மை நிலவரத்தை யாராலும் மறைக்க முடியாது. அந்த விதத்தில் இதுவரை ஓடிடி தளங்களின் வரலாற்றில் 150 கோடிக்கு மேல் விற்ற ஒரே தமிழ் படம் பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே. இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வரியுடன் சேர்த்து சுமார் 155 கோடிக்கு வாங்கியுது. தமிழ் படங்களின் வரலாற்றில் இன்றுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே அதிக விலைக்கு வாங்கிய திரைப்பட பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.