தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
நடிகை கோவை சரளா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர நடிகை, நகைச்சுவை நடிகையாக கலக்கியவர். சமீபகாலமாக படங்களில் நடிப்பதை கொஞ்சம் குறைத்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு உடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார் கோவை சரளா.
மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேலு, பஹத் பாசில் ஆகியோர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 'மாரீசன்' படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இதில் கோவை சரளா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, கோவை சரளா பல படங்களில் ஜோடியாக நடித்து காமெடியில் கலக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஒரு நடுத்தர வயதை சார்ந்தவரும், ஒரு இளைஞரும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை சாலையில் பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவத்தை மையமாக கொண்டதாக காமெடி கலந்த கதையில் உருவாகி வருகிறது.