விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கீர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |

கடந்த வருடம் மலையாளத்தில் சின்ன பட்ஜெட் படமாக கிட்டத்தட்ட புது முகங்கள் என்கிற அளவில் வெளியான ‛பிரேமலு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மமீதா பைஜூ, விஜய் மற்றும் சூர்யா படங்களில் அடுத்தடுத்து இணைந்து நடிக்கும் அளவிற்கு பிரபலமானார். அதேபோல படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நஸ்லேன் மற்றும் அவரது நண்பராக நடித்த சங்கீத் பிரதாப் ஆகியோருக்கும் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகின்றன.
அப்படி நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ள அவரது இரண்டாவது படம் ‛ஆலப்புழா ஜிம்கானா' வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. மம்முட்டி நடிப்பில் வெளியான போலீஸ் ஆக்சன் படமான ‛உண்ட' மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பில் அடிதடி சண்டை காட்சிகளுடன் வெளியான ‛தள்ளுமால' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். கல்லூரியில் சேர விரும்பும் இளைஞர்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கதாநாயகன் நஸ்லேன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட பிரபலமான கல்லூரியில் சேர விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கே இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக அந்த கல்லூரியில் சேர நினைக்கும் அவர்கள் இதற்காக பாக்ஸிங் கற்றுக் கொள்ள செல்கிறார்கள். அவர்கள் பாக்சிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னால் நடக்கும் சம்பவங்கள், அதன் பிறகு அவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததா என்பதை எல்லாம் மையப்படுத்தி இந்த படம் காமெடி கலந்து உருவாகியுள்ளதாம்.




