குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பாலிவுட்டின் ஆக் ஷன் ஹீரோ சன்னி தியோல். கடார் 2 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அவர் நடிப்பில் வெளியாக உள்ள அதிரடி ஆக் ஷன் படம் ‛ஜாட்'. கோபிசந்த் மலினேனி இயக்க, ரன்தீப் ஹூடா, ரெஜினா, வினீத் குமார் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏப்., 10ல் திரைக்கு வருகிறது. சமீபத்தில் சன்னி தியோலை சந்தித்தபோது அவர் அளித்த பேட்டி...
படத்திற்கான புரொமோஷன் பற்றி உங்கள் கருத்து என்ன?
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படத்திற்கு புரொமோஷன் என்பது முக்கியமானது ஆகிவிட்டது. நான் சினிமாவிற்கு வந்த புதிதில் இதேப்போன்று புரொமோஷன் செய்யும்போது நாம் ஏன் இதை செய்கிறோம் என யோசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அதை புரிந்து கொண்டுள்ளேன். இன்றைய சூழலில் அவரவர் தங்களது வேலைகளில் பிஸியாக இருப்பர். அவர்களுக்கு என் படம் வருகிறது என சொல்வதற்கு இந்த புரொமோஷன் உதவுகிறது.
ஜாட் படத்தில் தென்னிந்திய படங்களில் வரும் இரண்டரை கிலோ கையின் பலம் டயலாக் வருகிறது, அதுபற்றி?
இந்த டயலாக்கை நான் முதலில் சொல்ல தயங்கினேன். ஆனால் இயக்குனர் தான் படத்தின் காட்சிக்கு இந்த டயலாக் பொருந்துகிறது என்று சொன்னார். அவரின் வேண்டுகோளுக்காக அதை சொன்னேன்.
உங்கள் சகோதரர் பாபி தியோலுக்கும் ரீ-என்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளது. அதுபற்றி உங்கள் கருத்து?
மகிழ்ச்சியாக உள்ளது. அவர் தொடர்ச்சியாக நல்ல நல்ல படங்களில் நடிக்கிறார். பாபிக்கு நிறைய திறமை உள்ளது. ஆனால் அவரை இந்த சினிமா சரியாக பயன்படுத்தவில்லை என்ற கோபம் எனக்கு உண்டு. அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பின் அவரை ரசிகர்களும் விரும்புகிறார்கள். அவர் எப்போதும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பவராக தான் இருந்தார். நல்ல தோற்றம், நடிப்பு திறன், நடனம் ஆடுபவராகவும் இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வாய்ப்புகளை தரவில்லை. இப்போது நிறைய படங்களில் நடிக்கிறார், மகிழ்ச்சி.
உங்களின் அடுத்த படங்கள் பற்றி?
‛ஜாட்' படத்திற்கு பின் பார்டர் 2, ராமாயணம், லாகூர் 1947 ஆகியவை வர உள்ளன. முதல் கடார் படம் என் சினிமா வாழ்க்கையை மூடியது. இரண்டாவது கடார் படம் என் சினிமாவை மீண்டும் திறந்து வைத்தது. தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன்.