மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் |
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவின் ஆரம்பம் குறிப்பிடும் அளவில் ஆரம்பமாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்டின் துவக்கத்திலேயே பொங்கல் பண்டிகை வந்துவிடும். அந்த விடுமுறை நாட்களில் வரும் படங்கள் கொஞ்சம் நன்றாக இருந்தால் கூட போதும், நல்ல வசூலைப் பெற்றுவிடும்.
இந்த வருடப் பொங்கலுக்கு பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 12 வருடங்களுக்கு முன்பு வர வேண்டிய 'மத கஜ ராஜா' படம் வெளிவந்து 50 கோடி வசூலைக் கடந்தது மட்டும்தான் ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டது. அப்படத்துடன் வெளிவந்த 'காதலிக்க நேரமில்லை, வணங்கான், நேசிப்பாயா, தருணம்' ஆகியவை வரவேற்பைப் பெறவில்லை.
ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தமாக 26 படங்கள் வரை வெளிவந்தன. அவற்றில் இரண்டாவது சுமாரான வெற்றிப் படமாக மணிகண்டன் நடித்த 'குடும்பஸ்தன்' படம் அமைந்தது. அப்படம் 25 கோடி வரை வசூலித்தது. அம்மாதத்தில் வெளிவந்த 26 படங்களில் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் சுமாரான வெற்றியைப் பெற்றன. ஆகவேதான், 2025ன் ஆரம்பமே சுமாராகத்தான் அமைந்தது.
ஜனவரி போனால் என்ன பிப்ரவரி மாதத்தில் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டுவிடும் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்கள். ஆனால், அஜித்தின் பெரும் தோல்வியாகக் குறிப்பிடக் கூடிய 'விவேகம்' படத்தை விடவும் மோசமானதொரு வரவேற்பை 'விடாமுயற்சி' பெற்றது. இத்தனைக்கும் ஹாலிவுட் படத்தின் ரீமேக் வேறு என்று சொன்னார்கள். இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று அஜித் நடித்தார் என்றுதான் படம் வெளிவந்த பிறகு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
அஜித் படம் செய்ய முடியாத ஒரு சாதனையை அடுத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு வெளிவந்த 'டிராகன்' படம் செய்து ஆச்சரியத்தைக் கொடுத்தது. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளிவந்த படம். இரண்டாவது படத்திலும் அவர் நடிகராக வெற்றி பெற்றுவிட்டார். படம் 150 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது பிரதீப்பும் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார்.
அதே பிப்ரவரி மாதத்தில் தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் வெளிவந்தது. அப்படம் மீதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களைத் திருப்தியடைய வைக்கவில்லை.
பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி அதிகபட்சமாக 9 படங்கள் வெளிவந்தன. அம்மாதத்தில் மட்டும் மொத்தம் 19 படங்கள் வரை வெளிவந்தன. அதில் ஒரே ஒரு வெற்றியாக 'டிராகன்' படம் மட்டுமே அமைந்தது.
மார்ச் மாதம் என்றாலே முழு ஆண்டுத் தேர்வுகளுக்கான காலம் ஆரம்பமாகிவிடும். அதனால், அதிகமான படங்களை வெளியிட யோசிப்பார்கள். இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருந்தன.
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த 'கிங்ஸ்டன்' படம் வெளிவந்தது. வழக்கம் போல நாயகனாக மீண்டும் ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்தார் ஜிவி. அப்படத்திற்கு அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட.
மார்ச் 14ம் தேதி மீண்டும் 9 படங்கள் வெளிவந்தன. யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த 'ஸ்வீட்ஹார்ட்' படமும் அதில் ஒன்று. தயாரிப்பாளராக யுவனும் தோல்வியைத்தான் தழுவினார். ஒரே மாதத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் தயாரித்த படங்கள் தோல்வியடைந்தது அதிர்ச்சிதான்.
மார்ச் மாதத்தில் முதல் மூன்று வாரங்களுக்கு ஒரு படம் கூட ஓடவில்லை. பல தியேட்டர்களில் பகல் காட்சிகள், இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தகவல்களும் வந்தன. பல படங்களுக்கு ஆட்களே வராமல் முதல் நாள் முதல் காட்சி கூட ரத்து செய்யப்பட்டது என்றார்கள்.
இருந்தாலும் மாதக் கடைசியில் விக்ரம் நடித்து வெளிவந்த 'வீர தீர சூரன் 2' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் லாபத்தைக் கொடுத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு திரையுலக வட்டாரங்களில் உள்ளது.
மார்ச் மாதத்தில் மொத்தம் 19 படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'வீர தீர சூரன்' படம் மட்டுமே வெற்றிப் படம் என்ற பட்டியலில் சேரும்.
இந்த காலாண்டில் மொத்தமாக 64 படங்கள் வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் 2 படங்கள், பிப்ரவரி மாதத்தில் ஒரே ஒரு படம், மார்ச் மாதத்தில் ஒரே ஒரு படம் தான் வெற்றி என்றால் என்னவென்று சொல்வது ?.
அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களாக இருந்தாலும் சரி அவை நன்றாக இருந்தால் மட்டுமே தியேட்டர்கள் பக்கம் மக்கள் செல்கிறார்கள். இல்லையென்றால் நான்கு வாரங்கள் பொறுத்திருந்து ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்கிறார்கள்.
இந்த 60 படங்களில் 50 படங்கள் வரை வந்த சுவடு தெரியாமல் போன படங்கள்தான் அதிகம். வழக்கம் போல பல படங்களுக்கு டிரைலர்கள் கூட வெளியிடவில்லை. அந்தப் படங்களில் யார், யார் நடித்துள்ளார்கள் என்பதை கூகுளில் தேடினால் கூட கிடைக்கவில்லை. இந்த 2025லாவது இப்படியெல்லாம் நடக்காது என்று எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றமே.
இந்த ஆண்டில் இன்னும் உள்ள ஒன்பது மாதங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளன. தமிழ் சினிமா இன்னும் 1000 கோடி வசூலைத் தொடவில்லை என்ற ஒரு ஏக்கம் ரசிகர்களிடம் உள்ளது. அந்த ஏக்கத்தை இனி வர உள்ள படங்களில் ஏதாவது ஒரு படமாவது நிறைவேற்றுமா என்பதைப் பார்க்கக் காத்திருப்போம்.
2025 காலாண்டில் வெளியான படங்கள்…
ஜனவரி 3
பயாஸ்கோப்
கடைசி நேரத்தில்
கலன்
மௌனமே காதலாய்
சீசா
எக்ஸ்ட்ரீம்
ஜனவரி 10
மெட்ராஸ்காரன்
வணங்கான்
ஜனவரி 12
மத கஜ ராஜா
ஜனவரி 14
காதலிக்க நேரமில்லை
நேசிப்பாயா
தருணம்
ஜனவரி 17
சிதறிய பக்கங்கள்
ஜனவரி 24
பாட்டல் ராதா
குடும்பஸ்தன்
குழந்தைகள் முன்னேற்றக் கழகம்
Mr ஹவுஸ்கீப்பிங்
நான் வேற மாதிரி
பூர்வீகம்
வல்லான்
ஜனவரி 31
காண்டீபன்
ராஜபீமா
ரிங் ரிங்
தறுதல
வரம்பு
பிப்ரவரி
பிப்ரவரி 6
விடாமுயற்சி
பிப்ரவரி 14
2 கே லவ் ஸ்டோரி
9 ஏஎம் டூ 9 பிஎம் வேலண்டைன்ஸ் டே
அது வாங்குனா இது இலவசம்
பேபி & பேபி
தினசரி
பயர்
காதல் என்பது பொதுவுடமை
கண்நீரா
ஒத்த ஓட்டு முத்தையா
பிப்ரவரி 21
டிராகன்
ஈடாட்டம்
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
பல்லவபுரம் மனை எண் 666
பிறந்தநாள் வாழ்த்துகள்
பிப்ரவரி 28
அகத்தியா
கடைசி தோட்டா
கூரன்
சப்தம்
மார்ச்
மார்ச் 7
படவா
ஜென்டில்வுமன்
கிங்ஸ்டன்
லெக்பீஸ்
மர்மர்
எமகாதகி
மார்ச் 14
டெக்ஸ்டர்
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
குற்றம் குறை
மாடன் கோடை விழா
பெருசு
ராபர்
ஸ்வீட் ஹார்ட்
வருணன்
வீரத்தின் மகன்
மார்ச் 27
வீர தீர சூரன் 2
மார்ச் 28
அறம் செய்
த டோர்
மிஸ்டர் பர்பெக்ட்