நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரோஜாக்கூட்டம் உட்பட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பூமிகா. ஒரு கட்டத்தில் திருமணமாகி மும்பையில் செட்டில் ஆனார். பல ஆண்டுகளுக்குபின் ஜெயம்ரவி நடித்த பிரதர் படத்தில் அவருக்கு அக்கா வேடத்தில் நடித்தார். தனது ரீ என்ட்ரி ரீச் ஆக வேண்டும். அந்த படம் வெற்றி அடைய வேண்டும். தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என கணக்கு போட்டார். ஆனால், ராஜேஷ் எம் இயக்கிய அந்த படம் ஹிட்டாகவில்லை. இப்போது ஸ்கூல் என்ற படத்தில் டீச்சராக நடித்துள்ளார். இன்று அந்த படம் வெளியாகி உள்ளது. ஒரு பெரிய ஸ்கூலை அச்சுறுத்தும் 2 பேய்களை கட்டுப்படுத்தும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் டீச்சராக அதில் பூமிகா வருகிறார். அவருடன் சக ஆசிரியராக யோகிபாபு நடித்துள்ளார். நல்ல கேரக்டர் என்பதால் ஸ்கூல் படம் வெற்றி அடையும் என அவர் நம்பிக்கையுடன் இருக்கிறாராம். அவர் ஆசை நிறைவேறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.