இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
2025ம் ஆண்டின் காலாண்டு நேற்றோடு முடிவடைந்துவிட்டது. இந்த மூன்று மாதங்களில் சுமார் 65 படங்கள் வரை வெளிவந்துள்ளன. ஆனால், இந்த ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடும்படியான படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அடுத்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வெளிவருவதே அதற்குக் காரணம். அதற்கு முன்னதாக இந்த வாரம் குறிப்பிடும்படியான படங்கள் வெளியாகவில்லை.
ஏப்ரல் 18ம் தேதி சிபிராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் வெளியாக உள்ளது. இப்படத்தை முதலில் பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தள்ளி வைத்துவிட்டார்கள். படம் பற்றிய பேச்சு சிறப்பாக இருந்ததால் நல்ல இடைவெளி பார்த்து படத்தை வெளியிட முடிவு செய்து வெளியிடுகிறார்கள்.
ஏப்ரல் 24ம் தேதி சுந்தர் சி, வடிவேலு நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படம் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு, சுந்தர் சி இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிறையவே உள்ளது.
இந்த ஏப்ரல் மாதத்தில் 'குட் பேட் அக்லி, டென் ஹவர்ஸ், கேங்கர்ஸ்' ஆகிய மூன்றே மூன்று படங்கள் மட்டும்தான் குறிப்பிடும்படியான வெளியீடுகளாக உள்ளன. இந்த மூன்று படங்களின் தலைப்புகளுமே ஆங்கிலத் தலைப்புகள் என்பதில் ஒரே ஒரு ஒற்றுமை உள்ளது.