ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி | சமந்தா காதல் விவகாரம் : வதந்தி என்கிறார் மேனேஜர் | மூக்குத்தி அம்மன்-2 படத்தில் இரண்டு வேடங்களில் நயன்தாரா! | கிரவுட் பண்டிங்கில் உருவான 'மனிதர்கள்' | மீண்டும் கதை நாயகனாக காளி வெங்கட் | பிளாஷ்பேக்: வாகை சந்திரசேகரை அறிமுகப்படுத்திய பாரதிராஜா |
திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் சினிமாவில் புதிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்தியன்-2 படத்தில் அவர் நடித்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது காட்சிகள் அனைத்தும் இந்தியன்-3 படத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ள நிலையில் காஜல் அகர்வால் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த சிக்கந்தர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றபோது ஹீரோயினிக்கு இணையான கிளாமர் உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார் . அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதையடுத்து தெலுங்கில் கண்ணப்பா என்ற படத்தில் பார்வதி தேவி வேடத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால், தி இந்தியா ஸ்டோரி என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.