என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் திரைப்படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடிடி தளங்களில் அதிகம் வெளியாகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு மலையாள படம் ஓடிடி-யில் கலக்கி வருகிறது. சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படம் "தி காம்பினோஸ்".
சஸ்பென்ஸ் கிரைம் கலந்த இந்த திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது, இந்த திரைப்படத்தை பல முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருப்பார்கள். அதனால் இந்த இந்த திரைப்படம் இதுவரை எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் இருந்தது.
தற்போது இந்த திரைப்படம் மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் மார்ச் 28 அன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சம்பத் ராஜ், விஷ்ணு வினய் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கீரிஸ் பணிக்கர் இயக்கியுள்ளார்.