ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் முதன்முறையாக இணைந்து 'டூரிஸ்ட் பேமிலி' எனும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கின்றார்.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் குடும்பத்தினர் இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை பொருத்திக் கொள்கிறார்கள் என்பதை இப்படம் கலகலப்பாக சொல்கிறது. இதில் யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று சில மாதங்களாக இதன் டப்பிங் உள்ளிட்ட மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். இதே தேதியில் சூர்யாவின் 'ரெட்ரோ' படம் வெளியாகிறது என அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.