2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், 48 மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாரதிராஜாவின் நண்பரும், இசையமைப்பாளருமான இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛எனது நண்பர் பாரதியின் மகனான மனோஜ் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். என்ன சொல்வது என்றே வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம். நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று காலம் விதித்திருக்க வேண்டிய காரணத்தால் மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.