சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | பிளாஷ்பேக்: மகனுக்காக இயக்குனராக மாறிய நாகேஷ் | பிளாஷ்பேக்: தமிழ் திரைப்படமான ஆங்கில நாடகம் | இந்த உலகில் யாரும் சுயமாக உருவாக்கப்படுவது இல்லை : சல்மான் கான் பேட்டி | அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் |
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். சில வாரங்களுக்கு முன் இதய பிரச்னையால் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருந்த வந்த மனோஜிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது. மனோஜின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தாஜ்மகால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ், தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, மாநாடு, விருமன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மனோஜின் உடல் முன்னதாக சென்னை, சேத்துபட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
விஜய் அஞ்சலி
பின்னர் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட மனோஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நீலாங்கரையில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் வீடு உள்ளது. அவர் நடந்தே சென்று மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி
மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா சுப்ரமணியம், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, அதிமுக.,வின் ஜெயகுமார், விகே சசிகலா, தேமுதிக., பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பாரதிராஜாவிற்கும் ஆறுதல் கூறினர்.
திரையுலகினர் அஞ்சலி
இதேப்போல் நடிகர்கள் சூர்யா, சிவகுமார், சரத்குமார், ராதிகா, கேஎஸ் ரவிக்குமார், பிரபு, சுரேஷ் காமாட்சி, லிங்குசாமி, ஆர்கே செல்வமணி, நாம் தமிழர் கட்சியின் சீமான், பாடலாசிரியர் வைரமுத்து, கார்த்தி, டி சிவா, மாரி செல்வராஜ், ராம், ராஜ் கபூர், சித்ரா லட்சுமணன், இளவரசு, மணிரத்னம், சுஹாசினி, நாசர், பி வாசு, கவுண்டமணி, செந்தில், விதார்த், வசந்த், நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர், சந்தானபாரதி, சத்யராஜ், கருணாஸ், பாண்டியராஜன், பாண்டிராஜ், பாக்யராஜ், தம்பி ராமையா, சரவணன், பேரரசு, விஜய் சேதுபதி, சூரி, பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, விஜயகுமார், எம்எஸ் பாஸ்கர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை 4:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் மனோஜ் உடல் தகனம் செய்யப்படுகிறது.
கலங்கி நிற்கும் பாரதிராஜா
மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசிய பல திரைப்பிரபலங்கள் பாரதிராஜா இதை எப்படி தாங்கிக் கொள்ள போகிறார், அவரை எங்களால் இப்படி பார்க்க முடியவில்லை என்று தான் கலங்கி பேசினர். மகனின் உடலை பார்த்து பாரதிராஜா, அவரது மனைவி ஆகியோர் கலங்கிய வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகின.
திரையுலகினர் இரங்கல்
கமல்
நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜாவிற்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பவன் கல்யாண்
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜின் திடீர் மரணச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒரு நடிகராக சிறந்து விளங்கும் அதேவேளையில் இயக்குனராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அவர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது. பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கு மன தைரியத்தை அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.