டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு கோடைக் காலம் தீவிரமாக ஆரம்பித்துவிடும். மே மாதம் முடிய வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும். பள்ளி, கல்லூரிகள் விடுமுறை நாட்கள் என்பதால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர வாய்ப்பிருக்கிறது.
இரவு நேரங்களில் ஐபிஎல் போட்டிகள் பக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் உட்கார்ந்துவிட்டால் பகல் நேரங்களிலாவது தியேட்டர்கள் பக்கம் மக்கள் வரலாம். மக்களை வரவழைக்கும் அளவிற்குப் படங்கள் வந்தால் அது நிச்சயம் நடக்கும்.
தமிழ்ப் புத்தாண்டுக்கு சில நாட்கள் முன்னதாகவே அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட தனுஷ் நடித்த 'இட்லி கடை' வருவது சந்தேகம் என்கிறார்கள்.
சுந்தர் சி, வடிவேலு மீண்டும் இணைந்து நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து மே மாதம் 1ம் தேதி சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்த வாரங்களில் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்', விஜய் சேதுபதி நடித்துள்ள 'டிரைன்' மற்றும் 'ஏஸ்', உள்ளிட்ட முடிந்து போன சில படங்கள் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்புள்ளது.
ஜுன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படம் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக மே மாதத்தில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள சிலர் முன் வரலாம்.