என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை  ஆயிரம் கோடி வசூல் கிளப்பில்  இணைத்து விட வேண்டும் என்பதற்காக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் என பலமொழி நடிகர்களையும்  நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 
இதன் காரணமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் கூலி படத்தை அதிகப்படியான தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். நேற்றுமுன்தினம் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படவில்லை என்றாலும் , சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படத்தை திரைக்குக் கொண்டு  வர திட்டமிட்டு இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தேதியில் வேறு எந்த படமும் வெளியாக வில்லை என்பதால்  கூலி படம் சிங்கிளாக களம் இறங்கப்போகிறது.
 
           
             
           
             
           
             
           
            